'ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல' இபிஎஸ் கவலைப்பட தேவையில்லை: இபிஎஸ்க்கு மார்க்சிஸ்ட் சண்முகம் பதிலடி..! - Seithipunal
Seithipunal


பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட் 08) திருவாரூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது, அதிமுக, காணாமல் போகிறதா..? அல்லது கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா..? என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் இபிஎஸ் முதல் நாள் ஒன்றும், மறுநாள் ஒன்றும் மாற்றி,மாற்றி பேசுகிறார் என இபிஎஸ்க்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பதில் அளித்துள்ளார்.

அத்துடன், முரண்பாடாக பேசுவதை இபிஎஸ் வழக்கமாக வைத்துள்ளார் முதலில் அவர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த கூட்டணியில் ஏராளமான விஷயங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. அதிமுக, பாஜ கூட்டணியே ஒன்றுபட்ட கூட்டணியாக இல்லாமல் ஒருவர் கூட்டணி ஆட்சி என்பதும், மற்றொருவர் தனித்த ஆட்சி என்பதும் குழப்பமான சூழல் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami doesnt need to worry about the Communist Party of India Marxist Ibis Marxist Shanmugam responds


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->