செல்வானந்தம் மரணத்திற்கு காரணம் திமுகவினரின் சித்திரவதை: சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


செல்வானந்தம் மரணத்திற்கு காரணமான திமுகவினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.,அரசை வலியுறுத்துகிறேன் என்றும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., தொழில்நுட்பபிரிவு செயலாளர், எம். செல்வானந்தம் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழகத்தினருக்கும் அ.தி.மு.க., சார்பில் சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

பணம் கொடுக்கல் வாங்கலில் மதுரை மண்டல தி.மு.க., பொறுப்பாளர் , மதுரை தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர், தாராபுரம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட தி.மு.க.,-வினர் கொடுத்த சித்ரவதை தான் செல்வானந்தம் தன் உயிரை மாய்த்துக்கொள்ள காரணம் என தகவல்கள் வருகின்றன.

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என எண்ணும் தி.மு.க.,-வினருக்கு கடும் கண்டனம். செல்வானந்தம் மரணத்திற்கு காரணமான திமுகவினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.,அரசை வலியுறுத்துகிறேன்.' என்று 
எடப்பாடி பழனிச்சாமி அவருடைய அறிக்கையில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami alleges that DMKs torture was the cause of Selvanandhams death


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->