அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்.. நிற்கதியாய் நிற்கும் குடும்பங்கள்.! உடனே இதை தடை செய்ய வேண்டும்.!! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் அனாதையாகி வருகிறது. இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணங்களை இழந்து கடனாளி ஆகின்றனர். மேலும் பலர் கடனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டு தங்களது குடும்பத்தை அனாதையாகி விட்டு செல்கின்றனர். இது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது

சமீபத்தில் சென்னை பெருங்குடியில் மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு வங்கி ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு மணிகண்டன் என்கின்ற வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியர் திரு.மணிகண்டன் அவர்கள் தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும், இந்த திமுக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அம்மா அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருந்தது, நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இளைஞர்கள்  மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இத்தகைய சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy tweet for online game


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->