தேர்தலில் களமிறங்கும் முதலமைச்சரின் மகன்., தொகுதியும் ரெடி!!
edappadi palanisamy son mithun in election politics
சமீபத்தில் திமுக முன்னனி தலைவரான துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆய்வுக்குழு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, அரசின் திட்டங்களை ஆராய்ந்தது. இதனை தொடர்ந்து அந்தக் குழு தேனி மாவட்டத்துக்கும் சென்றது. அப்போது அங்கிருக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற துரை முருகனுக்கு சால்வை போட்டு உற்சாகமா வரவேற்ப்பு அளித்துள்ளார் ரவீந்திரநாத்.
இதையடுத்து, அங்கிருந்த டி.ஆர்.ஓ.வின் மீட்டிங் ஹாலில் துரைமுருகன் கொஞ்சம் ஓய்வெடுத்தார், அப்போது துரைமுருகனை விட்டு நகராம, இருந்த ரவீந்திரநாத் அவர் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு, ரொம்பவும் ஜாலியா அரைமணி நேரத்துக்கும் மேல் பேசிக்கிட்டு இருந்திருக்கார் ரவீந்திரநாத்.
இதற்கு பின்னர், நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்தியரசிடம் இருந்து எவ்வளவு நிதி வருது? விவசாயிகளுக்குச் சேர வேண்டிய 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை சரியா போய்ச் சேருதா? அது தொடர்பான விபரங்களை எனக்குக் தாருங்கள் என கலெக்டரிடம் ரவீந்திரநாத் கேட்டுறிருக்கிறார், இதனையடுத்து துரைமுருகன் இடைமறித்து, அதையெல்லாம் உங்ககிட்ட எதுக்குக் நாங்க கொடுக்கணும்? உங்க அப்பாதானே நிதியமைச்சர். அவரிடம் நீங்க கேட்க விரும்பும் விபரங்களைக் கேட்டுக்கங்ன்னு கிண்டலா சொல்லியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, எங்க வீட்டுக்கு மதிய விருந்துக்கு வாங்கன்னு துரைமுருகனை ரவீந்திரநாத் கூப்பிட்டப்பவும், "யப்பா ஆளை விடு'ன்னு அவரிடமிருந்து கழன்றுக்கிட்டாராம் துரைமுருகன். இப்படிப்பட்ட ரவீந்திரநாத் அதிமுக சீனியர்களை வளைச்சிப் போட்டுக் கட்சியையே தன் வசம் கொண்டு வந்துட்டா என்ன பண்றதுன்னு முதலமைசார் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முதல்வரின் மகனான மிதுனை களமிறக்குதாம். சேலத்தில் வசித்து வரும் மிதுனுக்கு எடப்பாடி தொகுதியில் வாக்காளர் அட்டை வாங்கி இருப்பது கூட 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அவரைக் களமிறக்கும் நோக்கத்துக்காகத் தான் என அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
English Summary
edappadi palanisamy son mithun in election politics