கடந்த 3 நாள், சேலத்தில் முகாம்! என்ன செய்கிறார் எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisamy salem ADMK Oct
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் சனிக்கிழமை சென்னையில் இருந்து சேலம் வந்தார்.
சேலம் வந்தவரை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கடந்த 3 நாள்கள் தங்கியுள்ளார்.
b
சேலம் வந்தாலே தினமும் கட்சி நிகழ்ச்சி, செய்தியாளர்கள் சந்திப்பு என பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறை தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியதாக தெரிகிறது.
இன்று முதல் கட்சி பணிகள், தேவர் ஜெயந்தி விழா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, கோவை கார் வெடிப்பு விவகாரம் குறித்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கோவை விவகாரம் மற்றும் தேவர் ஜெயந்தி விழா, தங்க கவசம் குறித்து சில முக்கிய முடிவுகளை அவர் எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Edappadi Palanisamy salem ADMK Oct