எடப்பாடியின் அடுத்தகட்ட நகர்வு! ஜெயலலிதா பிறந்த நாளில் 50 வேட்பாளர்கள் அறிவிப்பு? யார்? யார்? எங்கே! பரபரப்பான களம்! - Seithipunal
Seithipunal


2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் திமுக இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காத சூழலில், தேர்தல் களத்தில் முன்னிலை பெறும் நோக்கில் அதிமுக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அதிமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் முதற்கட்டமாக சுமார் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட பட்டியலில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகள் இடம்பெறும் என்றும், தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள சிலரின் பெயர்களும் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத மற்றும் அதிமுக உறுதியாக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களே முதலில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி நிலைக்கு வந்த பின், முழுமையான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், இந்த செயல்முறையை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரடியாக முன்னெடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும் சில கட்சிகளும் இணையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத் திட்டமிட்டு, வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கத் தயாராகி வருகிறது. அதேசமயம், தேமுதிக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது இன்னும் தெளிவாகாததால் அரசியல் யூகங்கள் அதிகரித்துள்ளன. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இடையேயான சமீபத்திய சந்திப்பு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிடும் அதிமுகவின் முடிவு, தமிழக அரசியல் போட்டியை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில், இந்த வேட்பாளர் அறிவிப்புகள் தேர்தல் அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi next move 50 candidates announced on Jayalalithaa birthday Who Who Where Exciting field


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->