ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்துக்கு?! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது, இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை சந்தித்தது . 

இந்நிலையில், அதிமுகவின் மதுரை வடக்கு தொகுதி எம்.ல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை இன்று சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என அறியமுடியவில்லை, மேலும்  ஓ.பி.ஸ் மற்றும் இ.பி .ஸ் அணிகள் இன்னும் முழுவதும் இணையவில்லை, கட்சி தலைமை யார் என்றே தெரிவதில்லை. மேலும் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் பொதுச்செயலாளரை தேர்தெடுக்க வேண்டும், தினகரன் என்ற மாயை தற்போது இல்லை என ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்து அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி பேட்டியளித்தார், அப்போது ராஜன் செல்லப்பா அதிமுக தலைமை குறித்து தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி அதிமுகவில் எந்த குழப்பமும் இல்ல எனவும் மேலும் அதிமுகவில் எந்த உட்கட்சி பூசலும் இல்லை நாங்கள் அனைவரும் ஒற்றுமையை உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

English Summary

edapadi palanisamy tell about rajan sellappa statement


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal