உள்துறை அமைச்சருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


வருகிற 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நாட்டா ஆகியோரை சந்திப்பதற்காக இன்று டெல்லி சென்றார்.

இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் டெல்லி சென்ற அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். 

அதன் பின்னர் அவர் அங்குள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுத்த எடப்பாடி பழனிசாமி இரவு 8:30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். 

சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீட்டித்த இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

மேலும், அதிமுக- பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் சாதகமான தொகுதிகள், தொகுதி பங்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்களவை தேர்தல் யூகம் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

edapadi palanisamy meet home minister amitsha in delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->