கார்த்திக் சிதம்பரத்திற்கு சிக்கல்.. ED கொடுத்து அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சீன நிறுவன ஊழியர்களுக்கு விசா பெற்று தந்ததற்காக வேதாந்த நிறுவனத்திடம் இருந்து ரூ. 50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கார்த்திக் சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதோடு அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி காட்டு சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை புதிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நரை நெருங்கி வரும் இந்த சூழலில் காங்கிரஸ் எம்பிக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ed filed new chargesheet against Karthik chidambaram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->