அரசியல் கட்சிகள் "சின்னம் பெறுவதில் புதிய சிக்கல்".! ஆப்பு அடித்த தேர்தல் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டாலும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தல் நேரத்தில் சின்னம் பெறுவதற்கு புதியவிதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவி்த்துள்ளது. இதன்படி, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் கடந்த 3 நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளையும், கடந்த 2 தேர்தலிலும் செலவு செய்த கணக்குகளையும், கட்சியின் அதிகாரபூர்வ நபர் கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்தையும் தாக்கல் செய்தால் மட்டுமே சின்னம் ஒதுக்கப்படும் என இந்தியதேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகள், புதிதாக பதிவு செய்த கட்சிகள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பெறாத கட்சிகள் மற்றும் பதிவு செய்தபின் தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளும் இந்த பட்டியலில் சேரும்.

பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொதுவான சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும், அந்தக் கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 5 சதவீத வாக்குகளை பெற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் கடந்த  2014ம் ஆண்டு முதல் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு பொதுச்சின்னம் தேவைப்பட்டால் பங்களிப்பு அறிக்கை, ஆண்டு கணக்கு, தேர்தல் செலவின விவரங்கள், சமீபத்திய கட்சியின் பதவி நிலவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் முன்பு  விவரங்களை தனியாக சமர்பித்தன. ஆனால், இனிமேல் பொது சின்னத்திற்கு விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இந்த புதிய விதி வரும் ஜனவரி 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 86 அரசியல் கட்சிகள் அடையாளம் இல்லாமல் இருப்தாகவும், 253 அரசியல் கட்சிகள் செயல்பாட்டில் இல்லாமல் இருப்தாகவும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EC announced new norms for unrecognized parties to get symbols


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->