நீங்களே புயலை வரவச்சுடாதீங்க - உதயநிதி ஸ்டாலின் கலகல பேட்டி! 
                                    
                                    
                                   DyCM Udhay say about Northeast monsoon Cyclone 
 
                                 
                               
                                
                                      
                                            நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (09-11-2024) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. 
இதன் காரணமாக, அடுத்த 30 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக
நகரக்கூடும் என்றும், தமிழகத்தில் பரவலாக அடுத்த 7 நாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கு தயாராக தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், புயல் வருவதாக வானிலை ஆய்வு மையம் எதுவும் சொல்லவில்லை, நீங்களே புயலவை வரவைத்து விடாதீர்கள் என்றும் செய்தியர்களிடம் கலகலப்பாக பேசினார் உதயநிதி.
                                     
                                 
                   
                       English Summary
                       DyCM Udhay say about Northeast monsoon Cyclone