எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 6 மாவட்டங்களில் உள்ள 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எஸ் பி வேலுமணி உட்பட 8 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

இதனிடையே இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  வருமானத்திற்கு அதிகமாக ரூ. 58,23,97,052 கோடி (3928%) சொத்துக் குவித்த காரணத்தால், எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும், 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது, 6 மாவட்டங்களில் உள்ள 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கேரளாவில் உள்ள எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC case against sp velumani


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->