'நீங்கள் நினைப்பது நடக்காது; வருத்தம், சங்கடம் இருந்தாலும் திமுக கூட்டணியில் தான் தொடருவோம்': துரை வைகோ அறிவிப்பு..!
Durai Vaiko announces that we will continue in the DMK alliance
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியில் விரிசல் வராத என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், தி.மு.க., கூட்டணியில் வருத்தம், மற்றும் சங்கடம் இருந்தாலும் அதில் எங்கள் கூட்டணி தொடருமென ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க.,வின் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் நாளை (ஜூன் 22) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 1700 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;
தி.மு.க., கூட்டணியில் 07 ஆண்டுகள் முடிந்து 08-வது ஆண்டாக இருக்கிறோம். கூட்டணி என்னும் போது ஒரு பொதுவான நோக்கம் இருக்கும். அதன்படிதான், கூட்டணியில் கட்சிகள் சேருகின்றன. நாங்களும் அதே அடிப்படையில் மதவாதத்தை எதிர்க்கும் நோக்கத்தில் அணியில் இணைந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றும், சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். கூட்டணியில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் எல்லாருக்கும் திருப்தியாக இருக்காது.
எங்கள் இயக்கத்துக்கு மட்டுமல்ல, பிற இயக்கங்களும் கேட்பது கிடைக்காது இருக்கலாம். ஆனால், அதை வைத்துக் கொண்டு கூட்டணியில் பிளவு, இவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழகத்தை பொறுத்த வரை இண்டி கூட்டணி வலுவாக இருக்கிறது.
ம.தி.மு.க.,வை பொறுத்தவரை, எல்லாருக்கும் அதிக சீட்டுகள் வரணும், குறைந்த பட்சம் 12 சீட்டுகளில் நின்றால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதால், அந்த ஆசை எங்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இந்த கூட்டணியில் விரிசல் வராத என்று எதிர்பார்க்கின்றனர். ஒரு தேர்தல் களத்தை பொறுத்த வரை, வலு பெறுவதும் எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்வதும் என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றும், கூட்டணியில் எங்களுக்கு வருத்தங்கள் இருக்கிறது, சங்கடங்கள் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் கூட்டணியில் தொடருவோம் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், 03 முறை மத்திய அமைச்சர் வாய்ப்பு வந்த போதும் வேண்டாம் என்று சொன்னவர் வைகோ. ஆகையால் தி.மு.க., கூட்டணியில் ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணி மாறமாட்டோம். எனவே நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ம.தி.மு.க., பொறுத்தவரை எதிர்பார்ப்பது தன்மானம், சுய மரியாதை. அதற்கு பாதகம் வந்துவிடக்கூடாது என்றுதான் விரும்புகிறோம். மேலும், சீமானை பொறுத்தவரைக்கும் அவர் பேசுவதாக இருக்கட்டும், செய்வதாக இருக்கட்டும், வித்தியாசமாக செய்கிறார். ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு என்று சொல்வது பல குழப்பங்களை உருவாக்கும் என்று தான் சொல்வேன் என்றும், அது ஒரு நல்ல விஷயம் என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு இயக்கத்துக்கும் குறைந்த பட்ச செயல்திட்டங்கள் என்பது இருக்கும். அதை நிறைவேற்ற, செயல்படுத்த ஆட்சியில் பங்கு என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த தருணத்தில் ஆட்சியில் பங்கு என்து பல குழப்பங்களை தரும் என்பது எனது அனுமானமாக இருக்கிறது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ஆங்கிலம் இல்லாத ஒரு பாரதம் உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா கூறுவது சாத்தியமா என்றுகேள்வி எழுப்பிய அவர், பல்வேறு துறைகளில் நமது தமிழக மாணவர்கள் கோலோச்சுகின்றனர் என்றால் அதற்கு ஆங்கில மொழி புலமை தான் காரணம் என்றும், இது எப்படி வந்தது என்றால் இருமொழிக் கொள்கையால் தான் என்று துறை வைகோ நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Durai Vaiko announces that we will continue in the DMK alliance