குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு.!!
Draubathi murmu sworn in as the president
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 63 சதவீதம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு சற்றுமுன் பதவியேற்றார். பாராளுமன்ற மையம் மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினர்.
English Summary
Draubathi murmu sworn in as the president