ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாமக, அதிமுக உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு  பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்து செய்தி : இன்று 63-ஆம் பிறந்தநாள் காணும் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுனர் சகோதரி  தமிழிசை சவுந்தரராஜனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பொதுப்பணியாற்ற வாழ்த்துகிறேன்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தி :மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான  டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்,

மாண்புமிகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பொதுப்பணி சிறந்து, பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி : தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் பொறுப்பினை வகிப்பவருமான அன்புச்சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அவர் தொடர்ந்து நாட்டுப் பணியாற்றிடும் வகையில், ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் இறைவன் அருள்வாராக.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Tamilisai 63 Birth day wish


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->