இந்தியாவை அவமதிக்கும் இலங்கை - மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை முன்வைக்கும் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை நிறுத்தி, உடனடியாக தமிழர்களின் படகுகளை மீட்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கான உரிமை இலங்கை அரசுக்கு இல்லை.

சிங்களப் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும்,  பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கும்படி இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து  இந்திய வெளியுறவு அமைச்சரே பேசிய நிலையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இந்தியாவை அவமதிக்கும் செயலாகும்.

இந்தியாவிடமிருந்து  இலங்கை ரூ.18,090 கோடி கடன் வசதி பெற்றுள்ளது. உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை  அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல. இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா  அறிய வேண்டும்.

மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க இலங்கை கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்" என்று  மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Sri Lankan Govt Order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal