குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீனா எடுத்த அதிரடி முடிவு...! - கருத்தடைக்கு 13% வரி
Chinas drastic decision encourage childbirth 13percentage tax contraceptives
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் சுமார் 140 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வந்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், 1994-ம் ஆண்டு “ஒரு குழந்தை கொள்கை” அரசால் அமல்படுத்தப்பட்டது.
இந்த கடும் கட்டுப்பாடு காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக சரிந்தது. அதே நேரத்தில், முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, எதிர்காலத்தில் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஒரு குழந்தை கொள்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் பல ஆண்டுகளாக ஒரே குழந்தை குடும்ப வாழ்க்கைக்கு பழகிவிட்ட சீன மக்கள், அதிலிருந்து விலக ஆர்வம் காட்டவில்லை.
அதன் விளைவாக, கடந்த ஆண்டு சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 10 கோடிக்கும் குறைவாக பதிவாகி, அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த பின்னணியில், குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் சீன அரசு தற்போது புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் உள்ளிட்ட பிறப்பு தடுப்பு பொருட்களுக்கு 13 சதவீத வரி விதித்து, மக்கள் அவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகை குறைவு என்ற புதிய சவாலுக்கு எதிராக சீனா எடுத்து வரும் இந்த நடவடிக்கை, உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
English Summary
Chinas drastic decision encourage childbirth 13percentage tax contraceptives