டாக்டர் ராமதாஸை வேதனையில் ஆழ்த்திய துக்க நிகழ்வு! இரங்கல் தெரிவித்த டாக்டர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


சேலத்தைச் சேர்ந்த பெயர் பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக  இன்று  காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனடையடைந்தேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பாரம்பரிய சித்த வைத்தியர் குடும்பத்தில் பிறந்த சிவராஜ் சிவக்குமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவம் செய்து வந்தார். சேலத்தில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி அதிக எண்ணிக்கையில் சித்த மருத்துவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

சித்த மருத்துவர் சிவராஜும், அவரது குடும்பத்தினரும் என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர்கள். நான் சேலம் செல்லும் போதெல்லாம் என்னை சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் , நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss mourning to demise of sidha dr Sivaraj


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal