இனி அவரை ''28 பைசா மோடி'' என்றுதான் அழைக்க வேண்டும்: கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, வருகின்ற மக்களவைத் தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தல் மூலம் மாநில உரிமைகளை மீட்க வேண்டும். 

ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு நம்முடைய மாநில உரிமைகள் அனைத்தும் பா.ஜ.க அரசிடம் அ.தி.மு.க அடிமைகள் அடகு வைத்து விட்டார்கள். 

இந்த 5 வருடத்தில் வரியாக 6.30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு காட்டி இருக்கிறோம் .மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரி கட்டினோம் என்றால் மத்திய அரசு நமக்கு 28 பைசா மட்டுமே திருப்பி அளிக்கிறது. 

ஒவ்வொருவருக்கும் 28 பைசா தரும் பிரதமர் மோடியை '28 பைசா மோடி' என தான் அழைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரூ. 6000 வழங்கினார். 

ஆனால் மத்திய பா.ஜ.க அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு மகளிர் உரிமை தொகையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ஆயிரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Youth Secretary Udayanidhi Stalin speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->