60 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கோட்டையை கைப்பற்றிய திமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதுவரை திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் - திமுக 8, அதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேட்சை 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கோட்டையாக இருந்த சிறுகமணியை, 60 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக கைப்பற்றுகிறது.

ராணிப்பேட்டை நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி. மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக 23, அதிமுக 4, காங்கிரஸ் 1, விசிக 1, சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் - திமுக 14, அதிமுக 4, அமமுக 2, மதிமுக 1, தேமுதிக 1, விசிக 1, சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக - 11, மார்க்சிஸ்ட் - 1, மதிமுக - 1 மற்றும் சுயேட்சையாக 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk win for sirugamani town


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->