சொல்லப்போனால் திமுகவிடம் இருக்கும் ஒரே ''கை'' செல்வப்பெருந்த''கை'' மட்டுமே! - Seithipunal
Seithipunal


''கை''யை கையாள முடியாமல் விழி பிதுங்கும் திமுக..?! இதுக்கு அதிமுக எவ்வளவோ மேல்!

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஒருபுறம், தன்னைச் சீண்டிய அண்ணாமலையை ஓரங்கட்டி, பாஜகவை சாமர்த்தியமாகக் கையாண்டு, அதிமுக தலைமையையில் வலுவான ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு சென்று இருக்கும் நிலையில்,  ஆளுங்கட்சியான திமுகவோ, தன் கூட்டணியில் இருந்துகொண்டே தனக்கு எதிராகக் கணை தொடுக்கும் காங்கிரஸைக் கையாள முடியாமல், கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த மோதலின் முக்கியப் புள்ளிகள்:

விஜய் கட்சி தொடங்கியது முதல் கை கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த திமுக, பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து கூட்டணியை இருக கைபற்றி கொண்டு இருந்தது. 

ஆனால், , "கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை" என்ற திமுகவின் பிடிவாதமும், திமுகவின் சில நிர்வாகிகள் காங்கிரசை விமர்சித்த விதமும், திமுக vs காங்கிரஸ் என்ற நிலைக்கு வந்துள்ளது. 

அதிலும் இன்று "திமுக செய்த பல தவறுகளுக்காகப் பழியைச் சுமந்தவர்கள் நாங்கள்; எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்தது இருப்பது, கூட்டணியின் விரிசலைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

மேலும், திமுகவின் பெருமைமிகு 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை, "வெற்றிக்கான வெறும் மூடநம்பிக்கை" எனத் தரவுகளுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்தது திமுக தலைமைக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, புதுச்சேரியில் காங்கிரஸை ஓரம் கட்டி தனித்து களமிறங்க திமுக ரகசிய சர்வே நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. 

அதிமுக கூட்டணி தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கும் வேளையில், திமுக தன் கூட்டணிக் கட்சியினரின் 'பதிலடி' அரசியலைச் சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் திமுகவிடம் ஒரே காங்கிரஸ் ''கை'' செல்வப்பெருந்த''கை'' மட்டுமே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk vs congress allince may be break


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->