அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை! து,முதல்வர் உதயநிதி சொன்ன செய்தி!
DMK Udhay ADMk EPS BJP Amit shah
அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற சார்பு அணிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திமுகவில் 25 அணிகள் உள்ளன. ஆனால் அதிமுகவே இன்று 25 அணிகளாக உடைந்துள்ளது.
அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை. இன்று அந்தக் கட்சி முழுமையாக அமித் ஷா கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பாஜக அமைத்த வலையில் பழனிசாமி சிக்கிவிட்டார்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,மத்திய அரசு, மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் ரூ.2,500 கோடி தர முடியாது என்று கூறியது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் ‘தேவையில்லை’ என்று பதிலளித்தார்.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறையும் எனவும், இந்தியாவில் இதற்கு எதிராக முதலில் குரல் எழுப்பியவர் ஸ்டாலின்தான்" என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழக உரிமை பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதாகவும், அதிமுக–பாஜக கூட்டணி ஊழலால் பாதிக்கப்பட்ட கூட்டணியாகவே இருக்கிறது என்றும் உதயநிதி விமர்சித்தார்.
English Summary
DMK Udhay ADMk EPS BJP Amit shah