அரசு பணியில் திமுக உறுப்பினர்கள்! உயர்நீதிமன்றம் சென்ற அதிமுக!
DMK TN GOVt Chenai HC ADMK
தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுக உறுப்பினர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு, அரசு உதவி செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்த அரசாணைக்கு எதிராக சீனிவாச மாசிலாமணி வழக்கு தொடர, அதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம் அந்த அரசாணைக்கு தற்காலிக தடை விதித்திருந்தது.
இந்நிலையில், திமுக ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவர்களை பதவியில் அமர்த்த முயற்சி நடைபெறுவதாகவும், எதிர்வரும் தேர்தலில் இது திமுகவிற்கு பலன் தரும் வகையில் அமைந்துள்ளதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக வழக்கறிஞர் அணியின் செயலாளர் இன்பதுரை, புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அரசு எந்தவித பொது அறிவிப்பும் வெளியிடாமல், தேர்வுமுறைகளை பின்பற்றாமலேயே, விண்ணப்பங்களை பெயரளவிலேயே வரவேற்று, திமுகவினரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும், பொதுமக்கள் நலனை பாதிக்கக் கூடியது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நியமனத்தை தடுக்க வேண்டியும், நிலுவையில் உள்ள வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
DMK TN GOVt Chenai HC ADMK