களமிரங்கும் திமுக! நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் தலைமையில்...! - துரைமுருகன்
DMK take field DMK district secretaries meeting tomorrow under chairmanship of the Chief Minister Duraimurugan
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 'திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்' என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-06-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
DMK take field DMK district secretaries meeting tomorrow under chairmanship of the Chief Minister Duraimurugan