கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை? – செந்தில் பாலாஜி விளக்கம்!
DMK Senthilbalaji no vote reason
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக தலைவர் வி.செந்தில் பாலாஜி இந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிடாமல், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
அவருக்கு கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் வாக்குரிமை இருந்ததால், அங்கு வந்து வாக்களிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் வாக்களிக்க வராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், கோவை தெற்கு தொகுதியில் காலை முதல் மாலை வரை அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரில் சென்று கண்காணித்து வந்ததாக தெரிவித்தார்.
மேலும், அந்த தொகுதி பதற்றம் நிறைந்த பகுதியாக இருந்ததால் அங்கிருந்தே நிலைமையை கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
இதன் காரணமாக கரூர் சென்று தனது வாக்கை பதிவு செய்ய முடியாமல் போனதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Senthilbalaji no vote reason