திமுக என்ற பலி சுவர், தமிழகத்தில் இதுவரை எத்தனை கட்சிகளை கபளீகரம் செய்துள்ளது தெரியுமா!!
திமுக என்ற பலி சுவர், தமிழகத்தில் இதுவரை எத்தனை கட்சிகளை கபளீகரம் செய்துள்ளது தெரியுமா!!
திராவிட முன்னேற்ற கழகம்
பெரியாரின் திராவிட கழகத்தில் இருந்து, பேரறிஞர் அண்ணா தலைமையில் பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு. தமிழகத்தில் காமராஜரின் பொற்கால ஆட்சிக்கு முடிவு கட்டி, தமிழகத்தில் ஆட்சியை பிடித்த மாபெரும் ஒரு அரசியல் சாம்ராஜ்யம்.

பெரியார் இறந்த பின் திமுகவிற்கு தலைவராக மு.கருணாநிதி பொறுப்பேற்றார். இந்திய அரசியலில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மு.கருணாநிதி. தலைவரான முதல் அவர் மறைந்த வரை தமிழகத்தில் ஈசல் போல் 100 க்கும் மேற்பட்ட கட்சிகள் முளைத்து மறைந்துவிட்டன.
திரு மு.கருணாநிதி
இந்திய அரசியலில் மு.கருணாநிதி அவர்களின் ராஜ தந்திரத்தை யாராலும் செய்ய முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இவரின் வாழ்க்கை வரலாற்றை படித்து வந்தாலே போதும் என்ற அளவுக்கு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் திரு மு.கருணாநிதி.

ஜெ.ஜெயலலிதா
ஆனால் இவருக்கு சமமான ஒரு அரசியல் எதிரி இருக்குமானால், அது திமுகவில் இருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக தான். ஆனால் அவரின் மறைவுக்கு பின், தனி ஒரு பெண்ணாக ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் செயல்பாடுகள் மு.கருணாநிதி அவர்களுக்கே சற்று திணறும் வகையில் தான் இருந்துள்ளது. உண்மையில் சொல்ல போனால், எம்.ஜி.ஆர்-யை விட ஜெயலலிதா அரசியலில் சாதனை தான் செய்துள்ளார்.

அதிமுக - திமுக
ஆம் தமிழகத்தில், அதிமுக - திமுக என்ற இரண்டு கட்சிகளை தவிர, வேறு எந்த கட்சியும் வளர விடமால் பார்த்து கொண்டதில் அதிமுக - திமுக இரண்டு பேருக்குமே பங்கு உண்டு. இந்திய-பாகிஸ்தான், அமெரிக்க-ரஷ்யா, பாஜக-காங்கிரஸ், ரஜினி-கமல், அஜித்-விஜய், பெப்சி-கோக் என்பது போல் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக-திமுக என்ற இரண்டு கட்சிகளை தவிர வேறு எந்த கட்சிகளையும், தமிழகத்தில் வளரவிடவில்லை.
தேமுதிக
இவர்களுக்கு மாற்றாக நடிகர் விஜயகாந்த் வளர்ந்து வந்த நேரத்தில், அவரின் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை கூண்டோடு திமுக பக்கம் இழுத்து வந்தது. அன்று முதல் இன்று வரை விஜயகாந்தின் தேமுதிக எழ முடியாமல் தவித்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானது ஒரு காரணமாக இருந்தாலும், அன்று கட்சி நிர்வாகிகளை திமுக பக்கம் அழைத்து வந்தது முக்கிய காரணமே.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
இதேபோல் திமுகவில் இருந்து பிரிந்து சென்ற வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி, ஈழ தமிழர்களுக்காக பல போராட்டங்கள் செய்து மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்து இருந்தார். அப்போது அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை கூண்டோடு திமுக பக்கம் இழுத்து வந்தது. அன்று போன மதிமுக தான் இன்றுவரை ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. தற்போது தனது தாய் கழகமான திமுகவோடு, வைகோ இணைந்துள்ளார்.

அமமுக
தற்போது இந்த வரிசையில், தினகரனின் அமமுகவும் இணைந்துள்ளது. செந்தில் பாலாஜி தனது தாய் கழகமான திமுகவிற்கு தான் சென்றாலும், தேர்தல் சமயத்தில் இது பெரும் பின்னடைவாகவே தினகரனுக்கு அமையும். இருப்பினும் தினகரன் செந்தில் பாலாஜி விலகிய இன்றே கரூர் மாவட்டம் சென்று கட்சியை வலுப்படுத்தும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார்.

தற்போது சிறிய தொகுப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் எனும் ஆழ்கடலில் இன்னும் வெளிச்சத்திற்கு வராமல் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பார்க்கலாம் திமுக என்ற பலி சுவரில் இன்னும் எத்தனை அரசியல் கட்சிகள் பலியாகும் என்று.
