அனுமதி மறுப்பு., மக்களவையில் திமுக எம்.பி.,க்கள் முழக்கம்., வெளிநடப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப் பெறக்கோரி, பாராளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. 

இந்த கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை மக்களவைத் தலைவரிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இன்று வழங்கினார். அதில் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 3 சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்" என நோட்டீஸில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழக ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என்று திமுக எம்.பி.,க்கள் முழக்கம் இட்டு வருகின்றனர்.

நீட் விலக்கு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக எம்பிக்கள் குற்றம்சாட்டி, தற்போது முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mps protest in parliament for r n ravi isuue neet bill


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->