திமுக-மநீம இடையே தொகுதி உடன்பாடு.! வெளியான முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பணிகளை துவங்கிவிட்டன. 

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்பமான கலை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து தற்போது விநியோகம் செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்து வருகிறது.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்கு மக்கள் கட்சியின் சார்பில் ஈஸ்வரன் போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோன்று ராமநாதபுரம் தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிட  திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாளர்களாம் எனவும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பிப்ரவரி 29ஆம் தேதி நடிகர் கமலஹாசன் மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளதால் அதற்கு முன்பு திமுகவுடன் தேர்தல் உடன்படிக்கை மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK mnm seats share final on or before feb28


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->