உதயநிதிக்கு இது தெரியுமா? கொளுத்தி போட்ட திமுக MLA.! தீயாய் பரவும் செய்தி.!!
DMK mla sakkottai Anbazagan participates in Sanatana Pongal function
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைத்த மாபெரும் சனாதன பொங்கல் விழாவில் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்ற விவகாரம் கட்சியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை கடுமையாக எதிர்த்து வரும் இந்து மக்கள் கட்சியினருடன் சாக்கோட்டை அன்பழகன் கைகோர்த்துள்ளாரா? அல்லது திமுக கை கோர்த்துள்ளதா? என்ற கேள்வி திமுகவுக்குள்ளேயே எழ தொடங்கியுள்ளது.

சனாதன கொள்கைக்கு ஆதரவாகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் நடைபெற்ற இந்த விழாவில் அன்பழகன் பங்கேற்றதால் திமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விழாவுக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களில் சனாதனத்தை போற்றும் மாபெரும் கலாச்சார பொங்கல் திருவிழா என குறிப்பிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது.

சனாதன கொள்ளகைக்கு எதிராக திக, திமுக, விசிக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தீவிர அரசியல் செய்து வரும் நிலையில் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் இந்து மக்கள் கட்சி சார்பில் நடை பெற்ற சனாதன பொங்கல் விழாவில் பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதற்க்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தனது சமுகவலைதள பக்கத்தில் "கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி நடத்தும் 'சனாதன' பொங்கல் விழாவில், திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்பு! 'சனாதன ஒழிப்புப் போராளி' உதயநிதிக்கு இது தெரியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
DMK mla sakkottai Anbazagan participates in Sanatana Pongal function