குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’... ‘தூய சக்தி’ அல்ல இது ‘துயர சக்தி’ - முக ஸ்டாலின் கடும் விமர்சனம்!
DMK MK Stalin condemn to tvk vijay admk mla issue
குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசின் மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
காட்சி 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூய சக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர சக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MK Stalin condemn to tvk vijay admk mla issue