தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்! எதிர்க்கட்சிகள் தவறான தகவல்கள் பரப்பி வருகின்றனர் - அமைச்சர் பதிலடி!
DMK Minister Geetha Jeevan Condemn to Opponent Party
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக தமிழக மகளிர் வள மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உதவித்தொகை திட்டம் ஒரு மிகப்பெரிய சமூக முன்னேற்றத் திட்டமாக பல மாநிலங்களிலும் அறிமுகமாகி உள்ளது. இது, பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களை ஆதரவற்ற நிலையிலிருந்து முன்னேற்றியுள்ளது.
மேலும், திமுக அரசு சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் நலனை உறுதிப்படுத்த, தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள் எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. பெண்கள் எந்தவொரு பிரச்சினையையும் தைரியமாக வெளிப்படுத்தி புகார் அளிக்கச் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இவ்வளவு திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போது, பெண்கள் பாதுகாப்பு இல்லை என கூறுவது முழுக்க முழுக்க தவறான பிரசாரமே" என்று அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
DMK Minister Geetha Jeevan Condemn to Opponent Party