நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்ணாமலை, அழிவு உறுதி! திமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி!
DMk Minister BJP Annamalai
திமுக அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தமிழகத்தின் தனிமனித வருவாய் வளர்ச்சியில் இரண்டங்க இலக்க சாதனை செய்து, முதலிடத்தை எட்டச் செய்த பெருமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கே சொந்தமானது. இப்படிப்பட்ட தலைவரை விமர்சிப்பதில் மட்டுமே பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆர்வம் காட்டுகிறார். ஆனால், அவர் தானே இன்று அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்.
ஒரு போலி வேடம் பூண்டு மக்களை கவர்ந்தவர் போல், அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கினார். ஆனால், விளைவாக அவர் தமிழகத்தில் பாஜகவிற்கு முன்னேற்றத்தை தேடித்தராமல் பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளார். தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள சூழல், அவரின் அரசியல் நிலைபாட்டின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. காலத்தால் அழியக்கூடிய தலைவராக அவர் மாறிவிட்டார்.
இதே கருத்தை பா.ஜ.வின் உள்கட்சித் தலைவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். அண்ணாமலையின் தலைமையால் தமிழக பா.ஜ.வை உச்சிக்குக் கொண்டு செல்ல முடியாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். மாறாக, கட்சியை முன்னேற்றுவதாகச் சொல்லப்பட்ட நிலையில், எந்த மாற்றத்தையும் அவர் கொண்டு வரவில்லை.
இந்நிலையிலேயே, பா.ஜ.வின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அண்ணாமலை தனது அரசியல் பயணத்தில் ஏற்படுத்திய தவறுகள், அவர் மட்டுமின்றி தமிழக பா.ஜ.வின் நிலைக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. எனவே, முன்னேற்றத்திற்கு பதிலாக பின்னடைவைத் தேடித்தந்தவர் என்ற விமர்சனத்திலிருந்து தப்ப முடியாத சூழலில் அவர் தள்ளப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
English Summary
DMk Minister BJP Annamalai