3 எம்.எம்.ஏக்கள் விவகாரத்தில் திமுகவின் அடுத்த செயல்பாடு.! பதற்றத்தில் அதிமுக., கைகொடுக்கும் திமுக.!! திட்டம் என்ன?.!! - Seithipunal
Seithipunal


தற்போதைய சட்டமன்றத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கள்ளக்குறிச்சி  சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாச்சலம் தொகுதியின் உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கியின் உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அதிமுக அணிக்கு எதிராக செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். 

ஆரம்பம் முதலே தினகரனுக்கு ஆதரவளித்து வரும் நிலையில் தற்பொழுது நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ததாகவும், அது மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து செயல்பட்டதாகவும் அக்கட்சியின் நிர்வாக பொறுப்பில் இருப்பதாகவும் கூறி அதிமுக  கொறடா தாமரை ராஜேந்திரனும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் அளிக்கும் விளக்கமானது போதுமானதாக திருப்திகரமாக இல்லை என்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்கள் மூவரும் அதிமுகவிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்போ, சட்டமன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றால் நாங்க நிச்சயமாக அதிமுகவை தான் ஆதரிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்கள். 

அதே போல இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்., மூன்று எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயர் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. மேலும்., சபாநாயகரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு மனு வழங்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையை திமுக வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk master plan about three mla issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->