விஜய் அரசியல் வருகையால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை - சொல்கிறார் கனிமொழி!
DMK Kanimozhi MP TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசாரத்தை திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரசார வாகனத்தில் நின்று தொடங்கினார்.
தவெக அமைப்பின் முதல் தேர்தல் பிரசாரம் என்பதால், தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். இதனால் காலை 10.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி, மாலை 3 மணிக்குப் பிறகே துவங்கியது.
விஜயின் அரசியல் அரங்கில் நுழைவைக் குறித்து திமுக எம்.பி. கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கும் யாரும் அண்ணா, பெரியார் ஆகியோரின் வழியையும், அவர்களின் சிந்தனையையும் தவிர்த்து முடியாது,” எனக் குறிப்பிட்டார்.
English Summary
DMK Kanimozhi MP TVK Vijay