தமிழகத்தில் இனி இதை விற்பனை செய்யும் மளிகை கடைக்கு சீல்.! தமிழக அமைச்சர் அதிரடி.! 
                                    
                                    
                                   dmk govt step against gutka issue 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த குட்கா பொருட்கள் சகஜமாக கிடைத்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, சட்டமன்ற வழக்கத்துக்குள் குட்கா, பான்மசாலா பொருட்களை மாலையாக அணிவித்துக்கொண்டு, தமிழகத்தில் பரவலாக குட்கா விற்பனையாகிறது என்று குற்றம்சாட்டியது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், தமிழகத்தில் குட்கா பொருட்களின் விற்பனை அதேபோன்றுதான் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது,

தமிழகத்தில் குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை, உள்ளாட்சித் துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடைகளில் குட்கா பொருட்களை விற்றால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
குட்கா விற்கும் கடைகளுக்கு சீல் வைத்துவிட்டால், குட்கா பான் மசாலா போன்றவற்றை ஒரே மாதத்தில் ஒழித்துவிடலாம்" என்று திமுக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       dmk govt step against gutka issue