அப்போலோவில் திமுகவின் முக்கியப்புள்ளி..! அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்..!  - Seithipunal
Seithipunal


சென்னை அப்போலோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். 

கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பொழுதும் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவின் காரணமாக துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

அதன் பின்னர் அவரது உடல்நிலை நன்கு தேறி வந்த நிலையில் நேற்று ராயப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்றார். அதன்பின்னர் வீட்டிற்கு சென்ற நேரத்தில் மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Image result for duraimurugan seithipunal

இதனை தொடர்ந்து துரைமுருகன் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். துரைமுருகனுக்கு 81 வயதாகும் நிலையில் உடல் சோர்வு காரணமாக அடிக்கடி இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்வதாக தகவல்கள் கூறுகின்றன. 

மருத்துவர்கள் அப்போலோவில் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk duraimurugan in apollo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal