சாலை விபத்தில் கோவையைச் சேர்ந்த திமுக கவுன்சில் பலி.!!
DMK councilor from Coimbatore dies in road accident in Tiruppur
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் குமார் செட்டிபாளையம் பேரூராட்சியில் 10வது வார்டு கவுன்சிலராகவும், திமுக வட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இவர் தனது மனைவி இந்துமதி மற்றும் 6 மாத குழந்தையுடன் சொந்த ஊரான ஈரோட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சந்தோஷ் குமார் குடும்பத்தினருடன் பயணம் செய்த வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் திமுக கவுன்சிலர் சந்தோஷ் குமார் மற்றும் அவரது 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது மனைவி இந்துமதி பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்தியவர் கோவை மாவட்ட சௌரிபாளையத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
DMK councilor from Coimbatore dies in road accident in Tiruppur