துரைமுருகன் குறித்து அவதூறு: ஊடக தர்மத்திற்கு எதிரான செயல்கள்; திமுக கண்டனம்..! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை'' என திமுக தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச் செயலாளர் தற்போது தவிர்த்து வருகிறார்.

இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.

காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும். நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK condemns the publication of false and defamatory reports regarding Duraimurugan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->