போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து அதிமுக பெண் வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகள்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திமுக வேட்பாளர் மீது புகார் அளிக்க சென்ற அதிமுக பெண் வேட்பாளரை போலீஸ் ஸ்டேஷன் புகுந்து திமுகவினர் தாக்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டில் வால்டர்ஸ் காட்டன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு பதிவு மையத்தில் திமுக வேட்பாளர் பாபு மற்றும் அதிமுக பெண் வேட்பாளர் சுதா இருவரும் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்துள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகறாக மாறியுள்ளது. அப்போது திமுக வேட்பாளர் பாபு அதிமுக பெண் வேட்பாளரை சுதாவை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் கோபமடைந்த சுதாவின் கணவர் சரவணன் மற்றும் அஷோக் இருவரும் பாபுவை தாக்கியுள்ளனர்.

அதன்பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்ற அதிமுக பெண் வேட்பாளர் சுதா, கணவர் சரவணன் மற்றும் மகன் அசோக் ஆகியோர் ரோசனை காவல் நிலையத்திற்கு திமுக வேட்பாளர் பாபு மீது புகார் அளிக்க சென்றுள்ளனர்.

இதனை அறிந்த திமுக வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் காவல் நிலையத்திற்குள் புகுந்து அதிமுக வேட்பாளர் சுதா, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து திமுகவினரை வெளியேற்றினர்.

இதனை அறிந்த அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்திற்கு முன்பு குவிந்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, டிஐஜி பாண்டியன் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தாக்குதல் தொடர்பாக திமுக வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK candidate attack ADMK women candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->