தமிழ்நாடு முழுவதும் "எல்லாருக்கும் எல்லாம்".. வெளியான அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினின் பிறந்த நாள் வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மார்ச் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் “எல்லாருக்கும் எல்லாம்” என்ற முழக்கத்துடன் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில், “மார்ச் 1-ம் தேதியன்று நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத் தலைவர் 71-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நம் தலைவர், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார்.தந்தை பெரியாரின் சமூகநீதியையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார் கழகத் தலைவர் அவர்கள்.

அத்தகைய பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாநகரம் மற்றும் நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ள பேச்சாளர்களைக் கொண்டு, “எல்லோருக்கும் எல்லாம்” “திராவிட மாடல் நாயகர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!” நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK announced mkStalin birthday public meeting


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->