#சற்றுமுன் : திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 18ஆம் தேதி சென்னையில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக கட்சி அறிவித்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற 18 .12 .2021 சனிக்கிழமை அன்று, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நகராட்சி தேர்தல், மேயர் பதவி, கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk announce dec 12


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->