யாருடன் கூட்டணி? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டும் தேமுதிக!
DMDK premalatha vijayakanth Election 2026
தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.
கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய கட்சியின் நிலைமை, யாருடன் கூட்டணி அமைக்கலாம், தனித்து போட்டியிடலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஜனவரி மாதம் கடலூர் பொதுக்கூட்டத்தில் தான் யாருடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும் என்று முன்பே அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMDK premalatha vijayakanth Election 2026