எனது அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் உருக்கம்! - Seithipunal
Seithipunal


மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் 'கேப்டன்' விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் (குருபூஜை) இன்று (டிசம்பர் 28) சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தலைவர்கள் அஞ்சலி:
விஜயகாந்தின் நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்குப் பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று மலர்தூவித் தங்களது மரியாதையைச் செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர், முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்

ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK DMK vijayakanth mk stalin


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->