அனல் பறக்கும் அரசியல் களம்: கூட்டணி பேச்சை மறைமுகமாக தொடங்கியதா தேமுதிக? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தேமுதிக கூட்டணி பேச்சை மறைமுகமாக தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தேமுதிக கூட்டணி பேச்சை மறைமுகமாக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்வதாகவும் பிரேமலதா விஜயகாந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட நான்கு தொகுதிகள் தேமுதிகவின் கோரிக்கையாக இருப்பதால் அதனை முன்வைத்து ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது. 

4 தொகுதிகள் உள்பட ராஜ்யசபா பதவியையும் கேட்க வேண்டும் என்ற முனைப்பில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக அதிமுக அல்லது பாஜகவின் கூட்டணியில் இணைவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK alliance talks issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->