திமுக கூட்டணியில் அதிருப்தி…இது மட்டும் நடந்தால்.. காங்கிரஸ் கலரே மாறிடும்! விஜயை காட்டி மாஜிகள் போடும் கணக்கு! காங்கிரஸ்சில் பரபரப்பு!
Dissatisfaction with the DMK alliance If this only happens Congress color will change The plan to make a fortune by showing Vijay There is a stir in the Congress
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நாளை ராகுல் காந்தியை சந்திக்க உள்ள நிலையில், கட்சிக்குள் பெரிய அரசியல் சலசலப்பு எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் தொடர வேண்டாம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கோரிக்கையை சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி தலைமையிடம் வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய அரசியல் வரைபடத்தை மாற்றக்கூடிய வகையில், தமிழகம்–புதுச்சேரி–கேரளா ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் ஒரு பெரிய கூட்டணி பிளான் சிலரால் முன்மொழியப்பட்டுள்ளது. விஜய்க்கு இந்த மூன்று மாநிலங்களிலும் ரசிகர் ஆதரவு இருப்பதை காரணமாக்கி, இந்த கூட்டணி தேர்தலில் வலுவான பலனைத் தரும் என்பதே அவர்களின் கணிப்பு.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுலுக்கு அனுப்பியதாக கூறப்படும் விவரங்களில், திமுக கூட்டணியில் காங்கிரஸின் வளர்ச்சி நின்றுவிட்டது, அதிகார பங்கீடு குறைவாக உள்ளது, தவெகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் அதிமுக அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எச்சரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழில் தவெகவுக்கு அதிக தொகுதிகளும், காங்கிரஸுக்கு உறுதியான தொகுதிகளும்; புதுச்சேரி, கேரளாவில் அதிகாரப் பங்கீடு பேசிக் கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுகள் அனைத்தும் தற்போது யூகங்களாக இருந்தாலும், விஜய்–காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்ற அரசியல் மதிப்பீடு வலுத்துள்ளது. திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது புதிய கூட்டணி உருவாக்குவதா என்பது குறித்து ராகுல் காந்தியின் சந்திப்பு தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Dissatisfaction with the DMK alliance If this only happens Congress color will change The plan to make a fortune by showing Vijay There is a stir in the Congress