தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்குது டெங்கு காய்ச்சல்...! 9 பேர் பலியானதால் சுகாதாரத்துறை தீவிரம்...! - முகக்கவசம் கட்டாயம் அணிய அமைச்சர் அதிரடி அறிவுறுத்தல் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே, சுவாசத்தொற்று பரவலும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மருத்துவக்கல்லூரியில் 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,"தமிழகத்தில் தற்போது சுவாசத்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், நோய் பரவலைத் தடுக்க பொதுமக்களும் உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே ஓய்வெடுத்து, பிறருக்கு நோய் பரவாமல் கவனமாக இருக்க வேண்டும். மேலும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது.இதனிடையே, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலும் தொடர்ந்து காணப்படுகிறது.

இந்த ஆண்டு இதுவரை 15,933 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.டெங்கு பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dengue fever increasing again Tamil Nadu Health department serious after 9 people died Minister issues directive make wearing face masks mandatory


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->