பிரதமர் மோடியின் தாயார் மறைவு - டாக்டர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் அம்மையார் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். 

நரேந்திர மோடி அவர்களின் வாழ்வில் அவரது தாயார் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை நான் அறிவேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி  இராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. 

நரேந்திர மோடி அவர்களின் வாழ்வில் அவரது தாயாரின் இடத்தை எவராலும்  நிரப்ப முடியாது. பிரதமருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அன்புமணி  இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deeply saddened by the passing away of the mother of PM


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->