அதிமுகவை காப்பற்றியது யார்? முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுகவை பழனிசாமி காப்பாற்றினார். ஆனால் எம்எல்ஏ ஆக கூட தகுதி இல்லாதவர் டிடிவி தினகரன் என்று, முன்னாள் அமைச்சர் டிவி சண்முகம் எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்தாவது, "தேர்தல் என்றால் மட்டுமே வெளியே வரும் தினகரன், கட்சி நடத்தாமல் கோஷ்டி வைத்து நடத்தி வருகிறார்.

கழகத்தை காப்பாற்றும் காவலனாக அண்ணன் எடப்பாடியார் செயல்பட்டு வருகிறார். ஒரு எம்எல்ஏ.,வாக கூட ஆக முடியாத டிடிவி தினகரன், எங்களை பற்றி குறை கூற தகுதியில்லை.

மறைந்த முதல்வர் புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா) சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி தினகரன் தான்” என்று சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், "புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட  அரசு கேபிள் டிவியை திமுக திட்டமிட்டு முடக்கியுள்ளது.

ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு அருகதையற்றவர். வாக்களித்த மக்களை மதிக்காமல் ஆட்சி செய்யும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஸ்டாலினின் கையாலாகாத தனத்தால், இரு சமூக மக்களிடையே பிரச்னையை தூண்டிவிட பார்க்கிறது இந்த திமுக. ஒப்பந்தரரர்கள் பணிசெய்ய விருப்பமின்றி இந்த விடியா திமுக ஆட்சியில் வேறு மாநிலங்களுக்கு தப்பி ஒட்டி கொண்டிருக்கின்றனர். 

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு ஆடு. அவர் எப்பொழுது வேண்டுமானாலும், யாரால் வேண்டுமானாலும் பலிக்கடாவாக ஆக்கப்படுவார்" என்று சிவி சண்முகம் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV Shanmugam Say About TTV EPS MKS


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,




Seithipunal