கடைசி நேரத்தில் நடந்த சம்பவம்.. அதிர்ச்சியில் விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். குறுகிய காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுதாக்கல் தொடங்கியதால், கூட்டணி கட்சிகளுக்கு இடப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றை விரைந்து அனைத்து கட்சிகளும் முடித்தனர்.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், கடைசி நேரத்தில் கூட கடலூர் மாநகராட்சி பொருத்தவரை தேமுதிகவினர் ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஒருவருக்கு சீட்டு தந்து உத்தரவிட்டும், அவர் திமுக சார்பில் போட்டியிடுகிறார். 

இதன்மூலம் கடலூர் மாநகராட்சியில் தேமுதிக சார்பில் யாரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தேமுதிக நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் மடக்கி உள்ளனர். அவர்களுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேமுதிக நிர்வாகிகளை முழுமையாக திமுக தன் பக்கம் இழுத்துள்ளது. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சியில் உறைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore dmdk issue vijayakanth shocked


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->