''மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது, அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல''; சிபிஐஎம் சண்முகம்..! - Seithipunal
Seithipunal


''மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல.'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்டுள்ளதாவது; ''உருவக் கேலி செயலில் யார் ஈடுபட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது.

மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.'' எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது  தொகுதியின் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ‘பெட்டி பாமா, பல்டி பாமா’ என விமர்சித்த அவர், சத்யபாமாவின் உருவம் குறித்தும் உருவக்கேலி செய்து பேசியிருந்தார்.

இதனையடுத்து தமிழக வெற்றிக் கழக மாநில வழக்கறிஞர் அணி சார்பாக தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIM's Shanmugam states that MK Stalins remarks regarding the Dharapuram candidate are unbecoming of the position he holds


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->